உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதுவே சரியான ஆரோக்கியம்

உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதுவே சரியான ஆரோக்கியம்

ஜெ யா மகேஷ்! கோவையை சேர்ந்தஉடல் இயக்க தெரப்பி (body sculpting therapy) பயிற்சியாளர். 'திருமதி இந்தியா' பட்டம் வென்ற மாடல், தனது 56 வயதிலும் பிட்டாக இருப்பது எப்படி? அவரிடமே கேட்டு விட்டோம்! வயது எதுவாக இருந்தாலும், உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். அதை விட அவசியம், மனதை அமைதியாக வைத்துக்கொள்வது. தற்போதைய சவால்கள் நிறைந்த உலகில் இது சிரமமான விஷயம் தான். நமக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கும், புதிதாக கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். ஒரு சில நபர்கள் உடன் இருப்பது, நமக்கு எப்போதும் ஒரு எதிர்மறை எண்ணங்களை, அழுத்தங்களை கொடுக்கும். அதுபோன்ற நபர்களிடம் நேரம் செலவிடுவதை ஒரு கட்டத்தில் முற்றிலும் தவிர்த்து விட்டேன். சரியான நேரத்தில் உணவு, துாக்கம், மல்டி வைட்டமின் மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையின் படி எடுத்துக்கொள்வேன். வைட்டமின் பி, டி போன்ற சத்துக்களை செக் செய்து, 40 வயதுக்கு மேல் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் ஸ்ரெட்ச் தெரப்பி, முக ஸ்ரெட்ச் தெரப்பி செய்துகொள்வேன். அதிகாலையில் ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடுவதும், தியானம் செய்வதும் பிடிக்கும். அதிகாலையில், 4:00 மணிக்கு எழுவது பல நேர்மறையான எண்ணங்களை தருகிறது. வேலைகளை முடித்த பின், சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்வேன். மொபைல் போனை அத்தியாவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்துவேன். வெளியூர், சுற்றுலா செல்லும் போதும், நேரம் கிடைக்காத சூழலிலும், உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனாலும், சாப்பிட்ட பின் அரை மணி நேரம் நடந்தபடி இருப்பேன். உடலும், மனதும் நம் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்; அதுவே சரியான ஆரோக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை