உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரியார் அறிவுலகத்தில் தொழில்நுட்ப மையம்

பெரியார் அறிவுலகத்தில் தொழில்நுட்ப மையம்

கோவை: சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோஸியேஷன் (சியா) உள்பிரிவான ‘கோவை நெக்ஸ் ஜி’ அமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மின் கட்டண வைப்பு தொகைக்கான இரண்டு பங்குகளை ஒரே தவணையில் செலுத்த வேண்டியுள்ளது. குறு, சிறு தொழில்முனைவோர் சிரமப்படுகின்றனர். வைப்பு தொகையை 12 தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும். 12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ள எல்.டி. சி.டி. இணைப்பு குறு நிறுவனங்களுக்கு நிலைக்கட்டணத்தை ரூ.150 இல் இருந்து ரூ.35 ஆக குறைக்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் எம்.எஸ்.எம்.இ.நிறுவனங்களுக்கு எந்திர முதலீட்டு மானியத்தை விரைந்து வழங்க வேண்டும். காந்திபுரம் பெரியார் அறிவுலக கட்டடத்தின் 5 மற்றும் 6வது தளங்களில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பயனடைய, தொழில்நுட்ப மையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் புதிய தயாரிப்பு வடிவமைப்பு, புத்தாக்கம், பயிற்சி மற்றும் மாணவர்கள் தொழில் நிறுவனங்கள் இணைப்பு ஏற்படும். அடிப்படை தேவைகளை நிறைவேற்றி உள்கட்டமைப்பை மேம்படுத்தினால் கோவை தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ