மேலும் செய்திகள்
மருத்துவ மதிப்பீட்டு முகாம்..
11-Nov-2024
வால்பாறை; வால்பாறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் வரவேற்றார்.வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் அன்பரசு ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில், செவித்திறன் குறைபாடுள்ள 7 பேர், பார்வை குறைபாடுள்ள,10 பேர், மனவளர்ச்சிக்குறைபாடு உள்ள, 67 பேர் உட்பட, மொத்தம், 137 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.இதில், 37 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரங்ணகள் மற்றும் புதிய அட்டை வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை,ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தில்குமார், பூங்கோதை, சிறப்பு பயிற்றுநர்கள் தேன்மொழி, ரம்யா, பிரபா, முத்துமாரி ஆகியோர் செய்திருந்தனர்.
11-Nov-2024