உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை; கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். புதிய தொழிலாளர் நல சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விற்பனை அபிவிருத்தி பணியை தொழில்துறை என, மத்திய அரசு அறிவிக்க வேண்டும், எட்டு மணி நேர வேலை என அறிவித்து, குறைந்தபட்ச ஊதியமாக, 26 ஆயிரத்து 910 ரூபாய் மாநில அரசு நிர்ணயம் செய்து ஆணையிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள், சம்மேளன மாநில செயற்குழு உறுப்பினர் வினோஜ் ராமானுஜம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேல்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை