உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.ஏ.பி., பாசனத்துக்கு நீர் திறக்க திட்டக்குழு ஆலோசனை கூட்டம்

பி.ஏ.பி., பாசனத்துக்கு நீர் திறக்க திட்டக்குழு ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி,; பி.ஏ.பி., பாசனம், மூன்றாம் மண்டலத்தில், நான்காம் சுற்றுக்கு, வரும், 24ம் தேதி தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பொள்ளாச்சியில், உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர்கள் சிவக்குமார், பிரபாகரன், நரேந்திரன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள், திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பரமசிவம் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, மூன்றாவது சுற்று தண்ணீர் கடந்த 15ம் தேதி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, நான்கு மற்றும் ஐந்தாவது சுற்றுக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வழக்கமாக ஒரு சுற்றுக்கு தண்ணீர் முடிந்ததும் சற்று இடைவெளி விடப்பட்டு, அணையின் நீர் இருப்பு உயர்த்தப்படும்.இந்த முறை நான்கு மற்றும் ஐந்தாவது சுற்றுக்கு தண்ணீர் தொடர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 24ம் தேதி முதல் நான்காவது சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ