உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலை நிறுத்த போராட்டம்; தோட்ட அதிகாரிகள் எச்சரிக்கை

வேலை நிறுத்த போராட்டம்; தோட்ட அதிகாரிகள் எச்சரிக்கை

வால்பாறை; மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், தொழிலாளர்களுக்கு அன்று சம்பளம் வழங்கப்படமாட்டாது, என, எஸ்டேட் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யக்கோரி, மத்திய அரசை கண்டித்து, வால்பாறையில் இன்று தொழிலாளர்களை வேலை நிறுத்த போராட்டத்திற்கு, அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு, வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு, தமிழக வணிகர் சம்மேளனம், வால்பாறை ரெசிடென்சி கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்நிலையில், வால்பாறை தேயிலை தோட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதா' வரைவு நிலையிலேயே இருப்பதாலும், அதன் மீது பெறப்பட்ட பல்வேறு ஆட்சேபனைகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாலும், இது குறித்து, தற்போதைய நிலையில் மேல்நடவடிக்கை தேவையில்லை.எனவே, தேயிலை எஸ்டேட்கள் 29ம்தேதி வழக்கம் போல் செயல்படும். மீறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி