மேலும் செய்திகள்
ஆர்வம் உழைப்பானால் அரசுப்பணி கைகூடும்
15-Dec-2024
சூலுார்; வி.பி.என். 4 ரக பாசிப்பயிறு பயிரிட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும், என, கோவை விதைச்சான்று மற்றும் உயிர் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.கோவை விதைச்சான்று மற்றும் உயிர் சான்று துறை உதவி இயக்குனர் மாரிமுத்து, சூலுார் வட்டாரத்தில், கரு விதைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்ட விதைப்பண்ணை களில் ஆய்வு செய்தார். விதைச்சான்று அலுவலர் ஹேமா, உதவி அலுவலர் குமணன்,பாரதி, பெரிய கருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.ஆய்வுக்குப்பின் விவசாயிகளிடம் அவர் கூறியதாவது :அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் ரகங்களில் உயர்தரமான விதைகள் உற்பத்தி செய்து, சான்றளிப்பின் மூலம் விவசாயிகளுக்கு வழங்குவதே சான்றளிப்பு துறையின் நோக்கமாகும்.ரபி பருவத்தில் சோளம் கே 12 ரகம், பாசிப்பயிறு வி.பி.என். 4 ஆகிய ராகங்களின் கரு விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, டிச., மற்றும் ஜனவரியில் அறுவடை செய்து, விதை சுத்தி மற்றும் விதை சான்று செய்து, சித்திரை மற்றும் ஆடி பட்டத்துக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்படும்.இதில், வி.பி.என் 4 ரக பாசிப்பயிறு குறுகிய கால ரகம். 70 நாட்களில் சீராக முதிர்ச்சி அடைவதால், அறுவடை செய்வதும் சுலபம். எக்டருக்கு, 900 கிலோ உற்பத்தியை தரும். பயிர் சுழற்சி செய்ய நல்ல ரகமாகும்.இந்த ரகத்தை பயிரிட்டால், குறுகிய கால உற்பத்தியால் வருமானமும், மண் வளமும் மேம்பட்டு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
15-Dec-2024