உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

ஆழியாறு வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

பொள்ளாச்சி ; ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியாறு பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனைமலை புலிகள்காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியாறு, வால்பாறை, சோலையாறு, கவியருவி போன்ற பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணியர், வனப்பகுதிக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். வனவிலங்குகள், அவற்றை உட்கொள்வதால், அவற்றின் உயிருக்கு ஆபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பொள்ளாச்சி வனச்சரகர் ஞான பாலமுருகன் தலைமையில் தன்னார்வலர்கள், வனத்துறையினர் இணைந்து ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி முதல், முதல் கொண்டை ஊசி வளைவு வரை பிளாஸ்டிக் கழிவை சேகரித்தனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !