உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி 5 விக்கெட் வீழ்த்தி வீரர் அபாரம்

சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டி 5 விக்கெட் வீழ்த்தி வீரர் அபாரம்

கோவை, : சி.டி.சி.ஏ., மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், வீரர் ஒருவர் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி., - ஐ.எம். எஸ்., மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இதில், கோவை காம்ரேட்ஸ் அணியும், கோவை லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின.பேட்டிங் செய்த கோவை காம்ரேட்ஸ் அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 144 ரன்கள் எடுத்தனர். அணி வீரர் ஜான் பப்டிஷ்ட், 51 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ஸ்ரீஹரி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய கோவை லெஜெண்ட்ஸ் அணியினர், 34.3 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 145 ரன்கள் எடுத்தனர். அணி வீரர்கள் சதீஷ்குமார், 53 ரன்களும், நரசிம்மன், 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை