உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் கிளஸ்டர் கால்பந்தில் கோப்பையை வென்ற வீரர்கள்

ரத்தினம் கிளஸ்டர் கால்பந்தில் கோப்பையை வென்ற வீரர்கள்

கோவை; ரத்தினம் சர்வதேச பப்ளிக் பள்ளி சார்பில் நடந்த, சி.பி.எஸ்.இ., கிளஸ்டர் கால்பந்து போட்டியில்300க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில், ஒமேகா ஹார்ட்புல்னஸ் பள்ளி சாம்பியனாக வெற்றி பெற்றது. படூர் கேட்வே இன்டர் நேஷனல் பள்ளிஇரண்டாம் இடத்தையும், வேலம்மாள் வித்யாலயா மற்றும் சத்ரிய வித்யாசாலா ஆங்கில மெட்ரிக் பள்ளிகள் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டன. 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில்,ஒமேகா ஹார்ட்புல்னஸ் பள்ளி சாம்பியன் பட்டத்தையும், வேலம்மாள் வித்யாலயா பள்ளி இரண்டாம் இடத்தையும், வேலம்மாள் வித்யாஷ்ரம் மற்றும் சின்மயா வித்யாலயா மூன்றாம் இடத்தையும் பகிர்ந்துகொண்டன. 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில், ராஜேந்திரன் அகாடமி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. தி எஸ்.சி.வி.,சென்ட்ரல் பள்ளி, ஸ்ரீ குருமுகி வித்யாஷ்ரம் மற்றும் கேம்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளி மூன்றாம் இடத்தை பகிர்ந்துகொண்டன. ரத்தினம் குழும தலைவர் செந்தில் தலைமை வகித்தார். வென்ற அணிகளுக்கு பதக்கங்கள், சாம்பியன்ஷிப் கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை