மேலும் செய்திகள்
கோவை அரசு பள்ளிகள் தேர்ச்சியில் முன்னேற்றம்
10-May-2025
கோவை, ;சி.பி.எஸ்.இ.,10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில், கோவை மாவட்டத்தில் செயல்படும் மத்திய அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. சூலூர், பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி, இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில், 99.33 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது. 149 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றதில், 148 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதில் 142 பேர், 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள், 11 பேர்.மாணவி ஆஷ்னா சிங் 482 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி வந்தனா - 480 இரண்டாமிடத்தையும், மாணவி வேதவர்னா - 473 மூன்றாமிடத்தையும் பிடித்தார். பத்தாம் வகுப்பிலும் இந்த பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 237 மாணவர்கள் தேர்வு எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 198 பேர், 60 சதவீதத்திற்கும் மேல், 35 பேர் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண் 587 ஆகும். கோவை பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி
இந்த பள்ளியும், 10 மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை புரிந்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 144 மாணவர்கள் பங்கேற்றதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பிரிவில் முதல் மதிப்பெண் 484 ஆகும்; அறிவியல் பிரிவில் 480 மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பிலும் 208 மாணவர்கள் தேர்வெழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி முதல் மதிப்பெண் 480 ஆகும்.
10-May-2025