உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்துயிர் பெறுகிறது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்

புத்துயிர் பெறுகிறது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்

கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஏற்படும் நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, 'அம்ரித் பாரத்' திட்டத்தில், போத்தனுார் ஸ்டேஷன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.'டிரிப் மெயின்டனன்ஸ்' உள்ளிட்ட கட்டமைப்புக்கென, ரூ.134.77 கோடி ஒதுக்கி வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.தற்போது, போத்தனுார்-மேட்டுப்பாளையம் (66612/16/20), பாலக்காடு டவுன்-திருச்சி (16844), கோவை-பொள்ளாச்சி (56113/5609), கோவை-மதுரை எக்ஸ்பிரஸ்(16721), கோவை-சொரனுார் (66603), கோவை-கண்ணுார்(16608) உட்பட 15 பயணிகள் ரயில்கள் போத்தனுாரில் இருந்தும், போத்தனுார் வழியாகவும் செல்கின்றன.30க்கு மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் கடந்து செல்கின்றன. போத்தனுாரில் இருந்து மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.''போத்தனுார் ஸ்டேஷனில் நிற்கும் ரயில்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், இந்த ஸ்டேஷனை அதிகம் பேர் பயன்படுத்த துவங்கியுள்ளனர். குறைந்த செலவில், பாதுகாப்பாக பயணம் செய்யலாம்,'' என்கிறார், கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு உதவி தலைவர் லட்சுமி நாரயணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D sendil kumar
ஜூலை 13, 2026 17:43

ரயில் பயணர் சங்கத்திற்கும் &தினமலர் நாளிதழ் வணக்கம் நமது podanur ரயில்வே ஸ்டேஷன் இன்னும் சில மாதத்தில் பணிகள் நிறைவடைத்து மேலும் பல ரயில்கள் இங்கு இருந்து செல்ல உள்ள நிலையில் நமது பகுதியில் போக்குவரத்து நெருக்கடி மிக பெரிய அளவில் உள்ளது. குறிப்பாக மேட்டூர் பாலம் துடங்கி மாலை 5மணி முதல் இரவு 9.30 மணி வரை அனைத்து வாகனமும் கடைவீதி நான்கு ரோடு சந்திப்பை கடந்து செல்ல 15 நிமிடம் மேல் ஆகிறது இப்போது. இதற்கு ஒரே தீர்வு ரயில் கல்யாண மண்டபம் முதல் மீன் கடை பிளாக் மாரியம்மன் கோயில் வரை பாலம் அமைத்தால் தான் பின் வரும் நாளில் போக்குவரத்துக்கும் ரயில் பயணிகள் குறித்த நேரத்தில் வந்து செல்ல அனைவரும் ஒன்றிணைவோம். இப்போது பாலம் பணிகள் தொடங்கினால் சுமார் 2வருடங்கள் ஆகும்.


KRISHNSWAMY MADIVANAN
ஜூலை 13, 2026 13:24

TRAINS STARTING FROM COIMBATORE JUNCTION CONTINUE TO OPERATE FROM COIMBATORE JN. TRAINS PASSING THROUGH COIMBATORE JN TO BE DIVERTED TO PODANUR JUNCTION. BY THIS MEASURE CONGESTION IN COIMBATORE JN REDUCED.


புதிய வீடியோ