உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராமத்து மண் வாசம் வீசும் கவிதைகள் இலக்கிய சந்திப்பு கூட்டத்தில் அலசல்

கிராமத்து மண் வாசம் வீசும் கவிதைகள் இலக்கிய சந்திப்பு கூட்டத்தில் அலசல்

கோவை : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், 254 வது இலக்கிய சந்திப்பு கூட்டம், தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு கவிஞர் ஜின்னா தலைமை வகித்தார்.எழுத்தாளர் இலக்கியன் எழுதி 'பனைவிடலி' சிறுகதை நுால் மற்றும் கவிஞர் வீரசோழன் திருமாவளவன் எழுதிய 'புத்தனின் புனைப்பெயர் ஆந்தை' என்ற கவிதை நுால் அறிமுகம் செய்யப்பட்டது.நுால் குறித்து அறிமுகம் செய்த போராசிரியர் கந்தசுப்பிரமணியம் பேசியதாவது:சங்க காலத்தில் தமிழர்கள் பொருள் தேடி புலம் பெயர்ந்து, வேறு இடத்துக்கு அல்லது வேறு நாடுகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. இன்றைக்கும் வாழ்க்கை தேவையை அடிப்படையாக கொண்டு மக்கள் வேலை தேடி, புலம் பெயர்ந்து நகரங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் செல்கின்றனர். எங்கு சென்றாலும் பிறந்து வளர்ந்த கிராமத்தையும், ஊரையும் மறந்து விடுவதில்லை. நகரத்தில் வசிக்கும் இந்த கவிஞரின் கவிதைகளில், கிராமத்தின் இயற்கையும், அங்கு வாழும் மக்கள் எதார்த்தமாக வாழ்க்கையும் பிரதிபலிக்கிறது. கவிதைகளை வாசிக்கும்போது கிராமத்தின் மண் வாசனை வெளிப்படுகிறது.இவ்வாறு, பேசினார்.எழுத்தாளர்கள் அரவிந்தன் ரவிச்சந்திரன், கரீம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை