போலீசார் நடவடிக்கை அவசியம்
கிணத்துக்கடவு; பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்கின்றன. இதில், பயணிக்கும் ஒரு சில பைக்குகளில், பின்பக்க சிகப்பு விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பயணிக்கும் போது, விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. மேலும், கிராமப்புற ரோடுகளில், பைக்குகளில் பின் பக்க சிகப்பு விளக்கு இல்லாமல் செல்லும் போது, பின் வரும் நான்கு சக்கரம் மற்றும் கன ரக வாகனங்கள் மோதி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும், பைக்குகளில் ஹாரன் இல்லாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு குறைகளுடன் இயக்குவதால், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இது போன்று பைக்குகள் ஓட்டுபவர்கள் மீது, ஆர்.டி.ஓ., அல்லது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.