உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணை வீடுகளில் கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

பண்ணை வீடுகளில் கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

ஆனைமலை; 'பண்ணை வீடுகள், தனியாக வீட்டில் வசிப்போர், வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்,' என, விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.பண்ணை வீடுகள் மற்றும் தனியாக வசிப்போரை நோட்டமிடும் மர்மநபர்கள், அவர்களை தாக்கியோ, மிரட்டியோ பணம், நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.இதுபோன்று, சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பாதுகாப்பாக இருப்பது குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, பொள்ளாச்சி அருகே, ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனில், விழிப்புணர்வு சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.இன்ஸ்பெக்டர் தாமோதரன் பேசியதாவது:பண்ணை வீடுகள் மற்றும் தனியாக வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீடுகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.வெளியூர் செல்லும் போது போலீசாருக்கு தகவல் தெரிவித்து சென்றால், கண்காணிப்பு மேற்கொள்ள வசதியாக இருக்கும். 'அலாரம்' அமைக்க வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். முன் பின் தெரியாதவர்களை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, பேசினார். சிறப்பு எஸ்.ஐ.,க்கள் முருகவேல், கர்ணன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை