உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அபார்ட்மென்டில் போலீசார் விழிப்புணர்வு: 6 மணி நேரத்தில் அரங்கேறிய சம்பவம்

அபார்ட்மென்டில் போலீசார் விழிப்புணர்வு: 6 மணி நேரத்தில் அரங்கேறிய சம்பவம்

பெ.நா.பாளையம் : அபார்ட்மென்ட்களில் நடக்கும் திருட்டைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய, அதே நாள் இரவில், நிகழ்ச்சி நடந்த அதே அபார்ட்மென்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம், துடியலூர் அருகே ஜி.என்.மில்ஸ் பிரிவு உருமாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில், கடந்த 6ம் தேதி துடியலூர் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், அபார்ட்மென்டில் திருட்டு சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.போலீசார் இரவு 8:00 மணிக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்திய 6 மணி நேரத்துக்குப் பிறகு, 7ம் தேதி அதிகாலை, 2:15 முதல், 2:40 மணிக்குள் முகமூடி கொள்ளையர்கள் 3 பேர், அதே அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர். அங்கு, ஆட்கள் இல்லாத பிளாட்டை அறிந்து, கதவை உடைத்து, கம்மல், நெக்லஸ், வளையல், செயின் என, 12 பவுன் எடையுள்ள நகைகளை திருடிச் சென்றனர். இச்சம்பவம்,போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துடியலூர் போலீசார் கூறியதாவது: துடியலூரில , அபார்ட்மென்ட் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. நல்ல உயரமுள்ள கொள்ளையர்கள், சுற்றுச்சுவர் ஏறிக்குதித்து, உள்ளே நுழைகின்றனர். உடலில் டவுசர் மட்டும் அணிந்து, எண்ணெய் பூசிக்கொண்டு, முகத்தை துணியால் முழுவதும் மறைத்தபடி, திருட்டு சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். அபார்ட்மென்ட் காவலர்கள் துரத்தினால், கல்லெறிந்து தாக்கி,தப்பிக்கின்றனர். பூட்டி இருக்கும் பிளாட்கள் தான், இவர்களின் இலக்கு.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.போலீசார் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்திய அதே அபார்ட்மென்ட்டில், அதே நாளில் நடந்துள்ள திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 14, 2024 18:36

யாருக்குத் தெரியும்? இந்தப் பக்கம் விழிப்புணர்வு கொடுத்துவிட்டு, தங்களேயோ , அல்லது ஆள் வைத்தோ திருட்டை அரங்கேற்றியிருக்கலாம் போலீஸ் எல்லாரும் யோக்கியர்கள் இல்லை


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 14, 2024 12:37

சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க எசமான், விழிப்புணர்வு டெமோவுக்கு வந்த காக்கிகளையே ஒரு தரம் சோதனை போடுங்க. இப்போவெல்லாம் காக்கி சட்டைக்காரங்கதான் நெறைய குற்ற செயல்ல ஈடுபடறாங்க.