மேலும் செய்திகள்
பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
14-Apr-2025
பெ.நா.பாளையம்; பெண்களை பாதுகாக்கும் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க, 'காவல் உதவி' செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என, போலீசார் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவசர காலங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக தமிழக காவல்துறை 'காவல் உதவி' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதால், ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும். தனியாக பயணிக்கும் அனைத்து பெண்களுமே, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது நல்லது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில், 'பள்ளி, கல்லுாரிகள் திறந்தவுடன் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மற்றும் காவல் உதவி செயலி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
14-Apr-2025