உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 1.5 கி.மீ., சுற்றியுள்ள வீடுகளில் ஆதார் கார்டு சேகரித்த போலீஸ்

1.5 கி.மீ., சுற்றியுள்ள வீடுகளில் ஆதார் கார்டு சேகரித்த போலீஸ்

மேட்டுப்பாளையம்:-: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இன்று வரவுள்ள ஒண்ணிப்பாளையம் எல்லை கருப்பராயன் கோவிலை சுற்றி 1.5 கிலோ மீட்டர் சுற்றளவில், உள்ள வீடுகள் அனைத்தையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ளவர்களின் ஆதார் கார்டு நகல்களை சேகரித்தனர். ஒண்ணிப்பாளையம் எல்லை கருப்பராயன் கோவில், காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இன்று வரவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கோவிலை சுற்றி 1.5 கிலோ மீட்டர் சுற்றளவில், அமைந்துள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு ஆதார் கார்டு நகல்களை சேகரித்தனர். மேலும், சந்தேகம்படும்படியான நபர்கள் யாராவது வந்தால் உடனே தகவல் தெரிவிக்கவும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை