உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் நிலையத்தில் போலீசார் குவிப்பு

ரயில் நிலையத்தில் போலீசார் குவிப்பு

மேட்டுப்பாளையம்; ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பை அடுத்து, காரமடை ரயில்நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும், வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரமடை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் வராததால் ரயில் மறியல் போராட்டம் நடக்கவில்லை.இருப்பினும் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார், என 50க்கும் மேற்பட்ட போலீசார் காரமடை ரயில் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை