உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடைகளில் அடுத்தடுத்து திருட்டு; போலீசார் விசாரணை

கடைகளில் அடுத்தடுத்து திருட்டு; போலீசார் விசாரணை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் அடுத்தடுத்து நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனூர் விஷ்ணு நகரில் வசிப்பவர் லட்சுமி கனி இளங்குழலி, 42. பெரியநாயக்கன்பாளையம் வண்ணான் கோவில் அருகே காய்கறி கடை நடத்தி வருகிறார். கடையில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் கதவு நெம்பி திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம், 44 ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருந்தது. சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் ரோட்டில் உள்ள மளிகை கடை நடத்தி வருபவர் பழனி, 40. நேற்று முன்தினம் மளிகை கடையை பூட்டிவிட்டு காலையில் கடைக்கு வந்தார். அப்போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ரொக்கம், 80 ஆயிரம் ரூபாய், 80 சிகரெட் பாக்கெட்டுகள், 40 சோப்பு, 10 எண்ணெய் பாக்கெட்டுகள் காணாமல் போய் இருந்தது. கடையில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !