அபராதம் விதிக்கும் போலீசார்: தவிர்க்க கோரும் அமைப்புகள்
வால்பாறை; 'பார்க்கிங்' வசதியில்லாத வால்பாறையில், சுற்றுலா வாகனங்களுக்கு போலீசார் அபர ா தம் விதிப்பதற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஷாஜூ, பாபுஜி, பிரதீப்குமார் மற்றும் டாக்சி அசோசியேசன் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், 'பார்க்கிங்' வசதி இல்லை. இது குறித்து, நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கூறியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், வால்பாறை வரும் சுற்றுலா பயணியரிடம் எவ்வித அறிவுரையும் கூறாமல், போலீசார் அபராதம் விதிக்கின்றனர். நகர் பகுதியை விட்டு வெளியே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தப்படும் உள்ளூர் வாகனங்களுக்கும், டாக்சிகளுக்கும் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம். சுற்றுலா வாகனங்களுக்கும், உள்ளூர் வாகனங்களுக்கும் போலீசார் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.