போலீஸ் செய்திகள்
வடமாநிலத்தவர் தற்கொலை
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் குருபத்ரா, 43. இவர், கிணத்துக்கடவு அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் குடும்பத்தாருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், கடன் பிரச்சனையும் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்தவர், தங்கி இருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூதாடிய 15 பேர் கைது
பொள்ளாச்சி அருகே, பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் உத்தரவுப்படி, தாலுகா போலீசார், ஆர்.பொன்னாபுரம் தனியார் கிளப்பில் ரெய்டு நடத்தினர். அங்கு, சூதாட்டம் ஆடிய, 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பலி
உடுமலை தும்பலப்பட்டியைச்சேர்ந்தவர் குருபிரசாத், 26. துங்காவியிலுள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை, பள்ளிக்கு, உடுமலையிலிருந்து, தாராபுரம் ரோட்டில், தாந்தோணி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே குருபிரசாத் பலியானார்.