உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடர் நகை கொள்ளையால் போலீசார்... எச்சரிக்கை! பாதுகாப்பு அம்சம் மேம்படுத்த அறிவுரை

தொடர் நகை கொள்ளையால் போலீசார்... எச்சரிக்கை! பாதுகாப்பு அம்சம் மேம்படுத்த அறிவுரை

கோவை : தொடர் கொள்ளைகள் நடந்த பின்னும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h4ui285d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவுண்டம்பாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த மாதம், 28ம் தேதி, 13 வீடுகளில் இருந்து, 42 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த கும்பல், மூன்று மாதங்களுக்கு முன் கோவை வந்து, நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவத்தின் வெப்பம் அடங்குவதற்குள், நேற்று முன்தினம், வெரைட்டி ஹால் ரோடு சாமி ஐயர் வீதியில் உள்ள ஒரு நகைப்பட்டறையை உடைத்து, ஒரு கிலோ தங்க நகைகளை இருவர் கொள்ளையடித்தனர். கொள்ளை நடந்த நகைப்பட்டறையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், இரும்பு கிரில் அமைக்கப்படவில்லை. பொதுவாக நகைப்பட்டறை மற்றும் நகைக்கடைகளை இரவில் அடைக்கும் போது, அனைத்து ஊழியர்களும் சென்ற பின், நகைகளின் எண்ணிக்கை மற்றும் எடை சரிபார்க்கப்பட்டு, கடைகளில் உள்ள பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனால், கொள்ளை நடந்த நகைப்பட்டறையில், அதுபோன்று செய்யாமல் மரப்பெட்டிகளில் வைத்திருந்தது, கொள்ளையருக்கு வசதியாக போய் விட்டது. இது போல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தாத நிறுவனங்களுக்கு, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், ''இந்த கொள்ளையில், மரப்பெட்டியுடன் நகைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவர்களுக்கு பெட்டகம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கண்காணிப்பு கேமராக்களில் 'மோஷன் சென்சார்' பொருத்த வேண்டும். எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை