மேலும் செய்திகள்
சர்வீஸ் ரோட்டில் வீணாகும் குடிநீர்
17-Jan-2025
கிணத்துக்கடவு,: கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஆண்டு, பல்வேறு காரணங்களால், 36 பேர் தற்கொலை செய்துள்ளனர்.கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், விபத்து, தற்கொலை மற்றும் சிறிய அளவிலான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. கடந்த ஆண்டில், 36 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.இதில், துாக்கிட்டு தற்கொலை --- 17, பூச்சி மருந்து மற்றும் விஷம் குடித்து தற்கொலை --- 16, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தல் -- 1, தண்ணீரில் குதித்து தற்கொலை -- 2, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், அதிகம் பாதிக்கப்படுவது இறந்தவர்களின் குடும்பத்தினரே. இதில், பெரும்பாலான தற்கொலைகளுக்கு மது பழக்கமே முக்கிய காரணம். இதனால், 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக தற்கொலைகள் நடந்துள்ளது. மேலும், குடும்ப பிரச்னை, கடன் தொல்லை போன்ற காரணங்களால் தற்கொலை செய்துள்ளனர், என, போலீசார் கூறுகின்றனர்.போலீசார் கூறியதாவது:ஒரு நபர் தனிமையில் இருத்தல், மன உளைச்சலை அடைதல், குடும்ப பிரச்னைகள், மது பழக்கம் போன்ற காரணத்தால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. தனிமையில் இருக்கும் நபர்களுக்கு அதிகளவில் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டு தற்கொலைக்கான எண்ணம் ஏற்படலாம்.சிலர் வீட்டிற்கு தெரியாமல் 'குடி' பழக்கத்திற்கு அடிமையாகின்றனார். இதை கட்டுப்படுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை சரி செய்ய, யோகா, தியானம், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளில் கவனத்தை செலுத்த வேண்டும்.மேலும், தற்கொலை எண்ணம் ஏற்படும் போது முறையாக மருத்துவர்கள் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு செய்தால், தற்கொலைக்கான எண்ணம் ஏற்படாது. தற்கொலைக்கு முயன்று, உயிர்பிழைப்போருக்கு, போலீஸ் தரப்பில் 'கவுன்சிலிங்' வழங்குகிறோம்.இவ்வாறு, கூறினர்.
17-Jan-2025