மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தி விற்ற நால்வர் கைது
22-Dec-2024
கோவை: கோவை மத்திய சிறையில் கஞ்சா வைத்திருந்த சிறை கைதியிடம், போலீசார் விசாரிக்கின்றனர். கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என, 3000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக, சிறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது, 28வது பிளாக்கில் உள்ள, 14வது அறை கழிப்பறை தொட்டி அருகில், நின்று கொண்டிருந்த பிரகாஷ், 33 என்ற கைதியிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் போலீசார் சோதனை செய்ய விடாமல் தகராறு செய்தார். சந்தேகம் அடைந்த போலீசார், மேலும் சில போலீசாரின் உதவியுடன், பிரகாசை சோதனை செய்தனர். அதில், அவர் எட்டு கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து, ஜெயிலர் சரவணக்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் கைதி பிரகாஷ், 33 மீது வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது, கஞ்சா கடத்தி வந்து கொடுத்தது யார், சிறை போலீசார் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.
22-Dec-2024