ரயிலில் கஞ்சா கடத்தியவரை தேடும் போலீஸ்
கோவை; நேற்று திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில்வே போலீசார் ரயிலில் சோதனை நடத்தினர். பொதுப்பிரிவு பெட்டியில் மூட்டை ஒன்று கிடந்தது. அதை சோதனை செய்த போலீசார் கஞ்சா இருப் பதை கண்டறிந்தனர். 16 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். வடமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த நபர் போலீசாரை பார்த்ததும், அதை போட்டு விட்டு, தப்பியது விசாரணையில் தெரிந்தது.