போலீசார் கண்காணிப்பு
நெகமம்: நெகமம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 5 டாஸ்மாக் மற்றும் ஒரு பார்; கிணத்துக்கடவில், 8 டாஸ்மாக், 7 பார்கள் உள்ளன. கடந்த இரு நாட்களாக, நெகமம் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் மக்கள் கூடும் பொது இடங்கள், டாஸ்மாக் கடை அருகே உள்ள பகுதிகளில் போலீசார் ‘ட்ரோன்’ வாயிலாக கண்காணித்தனர். இதில், நெகமம் அருகே வெவ்வேறு இடங்களில் மது அருந்திய, 17 பேரை கைது செய்தனர். கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோடு மற்றும் வடபுதூரில் உள்ள டாஸ்மாக் கடை பகுதிகளில், ரோட்டில் மது பாட்டில்களுடன் நின்றிருந்த, 20க்கும் மேற்பட்ட நபர்களை கண்டித்து, அறிவுரை கூறி அனுப்பினர்.