உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனங்களுக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ்

வாகனங்களுக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ்

கோவை; உக்கடம், அல் அமீன் காலனி, ரோஸ் கார்டன் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த கோரி, அல் அமீன் காலனி, ரோஸ் கார்டன் குடியிருப்போர் சங்கத்தினர், சாலை மறியல் போராட்டத்தில், ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.தகவல் அறிந்த அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பெரிய கடைவீதி போலீசார், அந்த பகுதியில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், 'வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்' என நோட்டீஸ் ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ