பெண்ணை வீடியோ எடுத்த போலீஸ்காரர் சிறையிலடைப்பு
: பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் டிரைவராக தென்காசியை சேர்ந்த போலீஸ்காரர் மாதவகண்ணன், 29 பணிபுரிந்து வந்தார். இவர் கோவையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இரு நாட்களுக்கு முன் அவ்வீட்டிலிருந்த பெண், குளியறைக்கு சென்றபோது, மொபைல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனைக்கண்ட அப்பெண் சத்தமிட்டுள்ளார். பெண்ணின் புகாரில், மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். நேற்று மாதவகண்ணனை கைது செய்து சிறையிலடைத்தனர். மாதவகண்ணன், 2018 ல் போலீசில் சேர்ந்துள்ளார். திருமணமாகி, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். -- நமது நிருபர் -