உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை, சிறுமுகையில் போலியோ விழிப்புணர்வு பேரணி

காரமடை, சிறுமுகையில் போலியோ விழிப்புணர்வு பேரணி

மேட்டுப்பாளையம்: காரமடை, சிறுமுகையில் தனியார் பள்ளிகளில், போலியோ விழிப்புணர்வு பேரணிகள் நடந்தன.உலக போலியோ தினத்தை முன்னிட்டு, காரமடை ரோட்டரி சங்கமும், எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் கிளப்பும் இணைந்து, காரமடையில் போலியோ விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பட்டய தலைவர் சிவ சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். போலியோ திட்ட தலைவர் மகேஷ் பேரணியை துவக்கி வைத்தார். எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி இன்ட்ராக்ட் கிளப் மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்று, போலியோவை ஒழிப்போம், போலியோவை தடுப்போம், போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, கையில் ஏந்தி சென்றனர். பேரணி கார் ஸ்டாண்ட் அருகில் துவங்கி, நான்கு ரத வீதிகள் மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கார் ஸ்டாண்டை அடைந்தது. இந்த பேரணியில் பள்ளி தாளாளர் பழனிசாமி, முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், உள்பட பலர் பங்கேற்றனர். சங்க செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.இதேபோன்று சிறுமுகை அம்பாள் பள்ளி இன்ட்ராக்ட் கிளப்பும், ரோட்டரி சங்கமும் இணைந்து, சிறுமுகையில், உலகப் போலியோ விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் கீதா தலைமை வகித்தார். டாக்டர் இஸ்மாயில் போலியோ பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி, சிறுமுகை நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை