மேலும் செய்திகள்
பொள்ளாச்சி சம்பவம் கூடுதலாக 25 லட்சம்
15-May-2025
கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவியர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஒன்பது குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட், மே 13-ல் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அரசு தரப்பில் மொத்தம், 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இழப்பீட்டுத் தொகையை பெற, பாதிக்கப்பட்ட பெண்கள், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர். மகளிர் கோர்ட் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஏழு பெண்களுக்கு, அவர்கள் வங்கி கணக்கில் தலா, 25 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. தீர்ப்பு அளிக்கப்பட்ட இரண்டு வாரங்களில், அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை, 1.75 கோடி ரூபாயை, சி.பி.ஐ., தரப்பு அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.
15-May-2025