உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடர் மழையால் நிரம்பும் குளங்கள்

தொடர் மழையால் நிரம்பும் குளங்கள்

அன்னுார்; இரண்டரை மாதத்திற்கு பிறகு அன்னுாரில் உள்ள குளங்களுக்கு அத்திக்கடவு நீர் வந்தது. அத்திக்கடவு நீர் மற்றும் மழையால் குளங்கள் நிரம்பி வருகின்றன.அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு சோதனை ஓட்டம் தொடங்கியது. மொத்தம் உள்ள 1045 குளங்களில் 98 சதவீத குளங்களுக்கு நீர் விடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 70 நாட்களில் 1.5 டி.எம்.சி., தண்ணீர் விட திட்டமிடப்பட்டுள்ளது.எனினும் மூன்று மாதங்களுக்கு முன்பு பவானி ஆற்றில் நீர் மிகவும் குறைந்தது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு அத்திக்கடவு நீர் விடுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் அதிக அளவில் நீர் செல்கிறது. இதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக அன்னுார் வட்டாரத்தில் அல்லிகுளம் உள்ளிட்ட பல குளங்களுக்கு அத்திக்கடவு நீர் வந்து கொண்டிருக்கிறது.குன்னத்தூராம்பாளையத்தில் உள்ள 95 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் நிரம்பி வருகிறது. எல்லபாளையத்தில் உள்ள ஆவாரம் குளம், கெம்பநாயக்கன் பாளையம் குளம், வடக்கலூர் குளம் என பல குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை