மேலும் செய்திகள்
அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா
11-Jan-2025
கோவை; கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், நடந்த பொங்கல் விழாவில், கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், குடும்பத்துடன் பங்கேற்றார். சமத்துவ பொங்கல் விழாவில், சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.விழாவின் ஒரு பகுதியாக போலீசார் மற்றும் குழந்தைகளுக்கு, தனித்தனியாக வயது வாரியாக 50 மீ., 100 மீ., ஓட்டம், கோலப்போட்டி, மியூச்சிக்கல் சேர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கு, எஸ்.பி., பரிசுகளை வழங்கினார். விழாவில், கோவை மாவட்ட போலீசார் குடும்பத்தினருடன், பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். இதேபோல், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
11-Jan-2025