மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
05-Jan-2025
கோவை, ; சரவணம்பட்டி, புரோசோன் மாலில் பொங்கல் பண்டிகைகொண்டாட்டம், சிறப்பாக நடைபெற்று வருகிறது.இங்கு, கடந்த 14ம் தேதி முதல் பொங்கல் விழா நடந்து வருகிறது. இதில்,தினமும் மாலை, 3:00 மணி முதல், 20க்கு மேற்பட்ட தமிழர் பாரம்பரிய கலைகள் நிகழ்த்தப்படுகின்றன. தஞ்சாவூர், மதுரை, கோவையை சார்ந்த, 200க்கு மேற்ப்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.30 அடி உயர பொங்கல் பானை, புரோசோன் மாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவையொட்டி, புரோசோன் மால் முழுவதும் உள்ள ஸ்டோர்களில், 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.வாடிக்கையாளர்கள், ரூ.6 ஆயிரத்திற்கு ஷாப்பிங் செய்யும் போது, ஹாப்பி ஹவர்ஸ் மூலம் இரவு, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை, இலவச பார்க்கிங் வசதி மற்றும் ரூ.250 மதிப்புள்ள உணவு கூப்பன் வழங்கப்படுகிறது. பொங்கல் விழா, நாளை நிறைவு பெறுகிறது.
05-Jan-2025