மேலும் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3,000 வழங்க முடிவு
10-Dec-2025
கோவை: தமிழக அரசு, பொங்கல் பண்டியை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு, ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அறிவிப்பு வெளி வந்தவுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, தேவையான ஏற்பாடுகளுடன் வழங்கல்துறை மற்றும் கூட்டுறவு சங்கத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அழகிரி கூறுகையில், ''கோவையில் உள்ள அனைத்து ரேஷன்கடைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள சர்க்கரை, பச்சரிசி அனுப்பப்பட்டு தயாரக உள்ளது. பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் கரும்பு, சேலம் மாவட்டத்தில் வாங்கப்படுகிறது. அதிகாரிகள் சென்று தரமான கரும்பை வாங்க, தோட்டங்களை தேர்வு செய்துள்ளனர். இலவச வேட்டி, சேலை ஒரு வாரத்துக்கு முன்பாகவே ரேஷன்கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு, வழங்க தயாராக உள்ளது. டோக்கன் வினியோகம் செய்யும் போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, ரேஷன்கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பு வந்தவுடன் டோக்கன் வழங்கப்படும்,'' என்றார்.
10-Dec-2025