மேலும் செய்திகள்
நித்தீஸ்வரர் கோவிலில் மகா ருத்ர யாகம்
30-Jul-2025
நெகமம்; நெகமம், செட்டியக்காபாளையம் வெள்ளையம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா, வரும் 6ம் தேதி நடக்கிறது. நெகமம், செட்டியக்காபாளையம் வெள்ளையம்மன் கோவிலில், பூ குண்டம் திருவிழா வரும், 5ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 6:00 மணிக்கு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் வெள்ளையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன்பின், காலை 9:00 மணிக்கு, கருப்பராயன் கோவிலில் பொங்கல் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, சக்தி அழைத்து வருதல், இரவு 9:00 மணிக்கு, குண்டம் திறப்பு நடக்கிறது. வரும், 6ம் தேதி, காலை 9:15 மணிக்கு, பூ குண்டம் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, வெள்ளையம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, அலங்கார பூஜைகள் நடக்கிறது.
30-Jul-2025