உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனி திருமஞ்சனத்தையொட்டி ஆடல் வல்லானுக்கு பூஜை

ஆனி திருமஞ்சனத்தையொட்டி ஆடல் வல்லானுக்கு பூஜை

சூலுார்; ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, சூலுார் தையல் நாயகி உடனமர் வைத்தீஸ்வர சுவாமி கோவில், மங்களாம்பிகை உடனமர் கணபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சூலுார் சுற்றுவட்டார சிவன் கோவில்களில் உள்ள சிவகாமி அம்பிகை சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்கள், பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்கள் சிவபெருமான் குறித்த பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். சக்தி விநாயகர் கோவிலில், மனோன்மணி உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான தம்பதியினர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மனோன்மணி உடனமர் வெள்ளிங்கிரி, முருகர், கருமாரியம்மன், கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறந்து சக்தி விநாயகருக்கு அபிஷேகம் அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு மனோன்மணி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்காரம் செய்த பின், சிறப்பு பூஜை செய்தனர். இந்த பூஜையில் ஏராளமான தம்பதியினரும், பக்தர்களும் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி