உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அஞ்சலக ஓய்வூதியர்கள் 4ம் தேதிக்குள் மனு அனுப்பவும்

அஞ்சலக ஓய்வூதியர்கள் 4ம் தேதிக்குள் மனு அனுப்பவும்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அஞ்சலக ஓய்வூதியர்கள் வரும், 4ம் தேதிக்குள் மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும், என, அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும், 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.வரும், 4ம் தேதி வரை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மனுக்களை, 'அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், பொள்ளாச்சி அஞ்சல் கோட்டம், பொள்ளாச்சி, 642 001' என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது 'dopollachi.indiapost.gov.in' என்ற முகவரிக்கு மின்னஞ்சலிலோ அனுப்பலாம்.தபாலில் அனுப்பும் போது உறையின் மேல், மின்னஞ்சலில் அனுப்பும் போது,பொருள் பகுதியிலும், 'பென்ஷன் அதாலத்' என குறிப்பிட வேண்டும். வாரிசுதாரர் போன்ற சட்ட ரீதியான குறைகள், கொள்கை சம்பந்தப்பட்ட குறைகள் அதாலத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது, என, அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை