மேலும் செய்திகள்
போஸ்டர் ஒட்டும் இடமான நிழற்குடை
09-Nov-2024
வால்பாறை; வால்பாறையில், பயணியர் நிழற்கூரையில், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரைகள் உள்ளன. பெரும்பாலான நிழற்கூரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளன.இந்நிலையில், வால்பாறையில் நகராட்சி சார்பில் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.மக்கள் கூறியதாவது: வால்பாறையில், பொதுமக்கள் நலன் கருதி கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரையை அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்து, போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.நகராட்சி அதிகாரிகள், நிழற்கூரையில் விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும். அத்துமீறி விளம்பர போஸ்டர் ஒட்டுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
09-Nov-2024