உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 28 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு

28 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு

கோவை; முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு, 12-ல் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்வுக்கான முன்னேற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. இத்தேர்வுக்காக, மாவட்டம் முழுவதும் 28 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலை) தலைமையில், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி, சி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணி மேல்நிலைப்பள்ளி உட்பட 28 மையங்களில், இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான அறைகள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை