மேலும் செய்திகள்
ஆசிரியர் இடமாறுதலுக்கு லட்சம் பேர் விண்ணப்பம்
27-Jun-2025
கோவை; மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படாமல், பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதை எதிர்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம், உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்; அரசு பள்ளிகளில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் உரிமைகளும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட, ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, உக்கடம் காவல் நிலையம் அருகே நேற்று, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆசிரியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் முகமது காஜா முகைதீன் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில் நடைபெறவுள்ள, பொது மாறுதல் கலந்தாய்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல், அவர்களுக்கான பதவி உயர்வும் வழங்கப்படாமலே கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வுக்குப் பிறகு காலியாகிவிடும்.இந்த காலிப் பணியிடங்களை நிர்வாக மாறுதல் மூலம், பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, நிரப்பும் சாத்தியங்கள் உள்ளன. இதனால், நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத சூழ்நிலை உருவாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
27-Jun-2025