மேலும் செய்திகள்
சிறுபாலத்தில் பள்ளம் காத்திருக்கு ஆபத்து
14-Jun-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் பெரிய பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மேட்டுப்பாளையம் கோவை ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்லும் பாதையில் பெரிய பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,'பள்ளம் நடு ரோட்டில் இருப்பதால், வாகனங்கள் பள்ளத்தை விட்டு ஒதுங்கியே செல்கின்றன. இதை அறியாமல் பின்னால் வரும் பெரிய வாகனங்கள், சிறிய வாகனங்களின் மீது அவ்வப்போது மோதி விபத்து ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறை உடனடியாக இப்பாதையில் உள்ள பள்ளத்தை செப்பனிட்டு சரி செய்ய முன்வர வேண்டும்' என்றனர்.
14-Jun-2025