உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குண்டும் குழியுமான ரோடு; வாகன ஓட்டுநர்கள் அவதி

குண்டும் குழியுமான ரோடு; வாகன ஓட்டுநர்கள் அவதி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி கால்நடை மருத்துவமனை அருகே, நகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் ரோடு திருப்பத்தில் பெரிய குழி உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. மரப்பேட்டை கந்தசாமி பூங்கா, ராஜாமில் ரோடு என நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடுகள், குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், கவனமின்றி வருவோர் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் குழி இருப்பது தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். ரோடுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'ரோடுகள் சீரம ை க்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் பணிகள் துவங்கப்படவில்லை. விரைவில் பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை