உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையில் பவர் கட்; பொதுமக்கள் அதிருப்தி

கோடையில் பவர் கட்; பொதுமக்கள் அதிருப்தி

கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில், கோடை காலத்தில், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கோடை வெயில் சுட்டெரிப்பதால், மக்கள் பலர் நீண்ட நேரம் வெயிலில் செல்லாமல் இருக்கின்றனர். மேலும், வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள, பழச்சாறு உள்ளிட்டவைகளை பருகி வருகின்றனர்.தற்போது, பள்ளி தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் பலர் விளையாட முடியாமல் வீட்டில் முடங்குகின்றனர். இப்படி இருக்க, இந்த கோடை காலத்தில், மதியம் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.இதனால், வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால், குழந்தைகள், முதியவர்கள் தூங்காமல் தவிக்கின்றனர்.எனவே, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் நலன் கருதி, இப்பகுதியில் அடிக்கடி நிலவும் மின்வெட்டை, மின்துறை அதிகாரிகள் கவனித்து உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும்.கோடை முடியும் வரை அதிகளவு மின்வெட்டு ஏற்படாத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை