சேவை அமைப்புகளுக்கு சக்தி மசாலா கவுரவம்
கோவை; சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளையின் 25வது விழா, ஈரோடு சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி, சாந்தி துரைசாமி தலைமை வகித்தனர்.ஈரோடு, எஸ்.கே.எம்., குழும நிறுவனங்கள் தலைவர் மயிலானந்தன், சேவை அமைப்புகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.ஈரோடு, வேளாளர் கல்வி நிறுவனங்கள் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகருக்கு, சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன், அரிமா சங்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் முத்துசாமி, ஈரோடு பாரதிய வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகை மற்றும் சேவை அமைப்புகளுக்கு,ரூ.1.46 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது.