பி.பி.ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, வணிகவியல் கல்லுாரி சார்பில் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.பி.பி.ஜி.,கல்வி குழுமத்தின் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி முன்னிலை வகித்தார். 218 மாணவர்கள், பொறியியல் பட்டமும், 74 மாணவர்கள் மேலாண்மை கல்வி பட்டமும் பெற்றனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கர்நாடகா மாநில தொழில்துறை முதன்மை செயலர் செல்வக்குமார் பேசுகையில், “பட்டம் பெற்று வெளியே வருவோருக்கு, தற்போதைய உலகம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்துள்ளது. திறமையை வளர்த்துக் கொண்டால் எங்கும் வெற்றி பெற முடியும்,” என்றார்.வி.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் நிறுவன வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், “மத்திய, மாநில அரசுகள் ஒட்டுமொத்த வருவாயில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், 2.5 சதவீத அளவிற்கே நிதி ஒதுக்கீடு கிடைக்கிறது. அவைகளும் முற்றிலுமாக செலவிடப்படுவதில்லை,” என்றார்.விழாவில், பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் சாந்தக்குமார், வணிக கல்லுாரியின் முதல்வர் வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.