உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்; 22ம் தேதி நடக்கிறது

வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்; 22ம் தேதி நடக்கிறது

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம், வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடக்க உள்ள இம்மருத்துவ முகாமில் கண், பல், காது, எலும்பு, சித்தா, பொது மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. மேலும், மருத்துவ குழுவினர் மக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகளை பரிசோதனை செய்து அங்கேயே மருந்து, மாத்திரைகளை வழங்க உள்ளனர். மேலும், கண்புரை உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்படுவார்கள். இந்த முகாமில், சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி