குறைப்பிரசவ குழந்தைகள் சிறப்பு கவனிப்பு
கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக குறைமாத குழந்தைகளின் தினம் கொண்டாடப்பட்டது.பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சுஜா மரியம்பேசுகையில், ''ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள என்.ஐ.சி.யு., பிரிவில் அதிநவீன வசதிகள் உள்ளன. தாய்பால் வங்கி குழந்தைகளுக்கு தடையின்றி தாய்ப்பால் வழங்க உதவுகிறது. என்.ஐ.சி.யு.,வில்சிக்கலான இதய மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட பச்சிளம் குழந்தைகளும் பராமரிக்கப்படுகின்றனர்,'' என்றார்.குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சித்தார்த்த புத்தவரபு குறைப்பிரசவ குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் மற்றும் டாக்டர்கள், என்.ஐ.சி.யு., செவிலியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.