மேலும் செய்திகள்
பள்ளியில் காய்கறி தோட்டம் மாணவர்களிடையே ஆர்வம்
25-Jan-2025
கிணத்துக்கடவு; ணத்துக்கடவு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழா ஆயத்த கூட்டம் நேற்று நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு மற்றும் வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, என மூன்று பள்ளிகளும் நூறு ஆண்டுகளை கடந்துள்ளன. இதனை கொண்டாட அந்தந்த பள்ளிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.இதை தொடர்ந்து, முதற்கட்டமாக, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நூற்றாண்டு விழாவுக்கான ஆயத்த கூட்டம் நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணம்மாள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முன்னாள் மாணவர்கள் பேசுகையில், 'இந்தப் பள்ளி துவங்கி நூற்றாண்டுகள் கடந்து விட்டது. இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் நல்ல நிலையை அடைந்துள்ளனர். மேலும், இங்கு கல்வி பயிலும் குழந்தைகள் அனைவரும் நன்கு படித்து, நல்ல நிலையை அடைய வேண்டும்,' என்றனர்.தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் பேசுகையில், ''இப்பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது மகிழ்ச்சியான நிகழ்வாகும். இதை சிறப்பான நிகழ்வாக மாற்ற வேண்டும்,'' என்றார்.மேலும், நூற்றாண்டு விழாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த கருத்துகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
25-Jan-2025