உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணி நிறைவு விழாவுக்கு வருமாறு ஜனாதிபதி, பிரதமருக்கு அழைப்பு

பணி நிறைவு விழாவுக்கு வருமாறு ஜனாதிபதி, பிரதமருக்கு அழைப்பு

வால்பாறை; பணி நிறைவு விழாவிற்கு வருகை தருமாறு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு, அஞ்சல் அட்டை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார் அஞ்சல் ஊழியர்.வால்பாறை அஞ்சலகத்தில் பல்நோக்கு பணியாளராக பணிபுரிந்து வருபவர் கணேசன். இவர் கடந்த, 42 ஆண்டுகளாக வால்பாறை மலைப்பகுதியிலேயே பணிபுரிதுள்ளார். இவர், இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும் நிலையில், பிரிவு உபச்சார விழாவுக்கு, ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோருக்கு, 50 பைசா அஞ்சல் அட்டை வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து கணேசன் கூறியதாவது:அஞ்சல் துறை வேகமாக முன்னேறி வருகிறது. டிஜிட்டல் வாயிலாக அனைத்தும் எளிமையாக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெறும் சேவையை அஞ்சலகத்தில் பயன்பெறும் வகையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 50 பைசாவில் தகவல் தொடர்பு கொள்ளும், அஞ்சல அட்டை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் அட்டை வாயிலாக, விழாவுக்காக வால்பாறை வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி